சேற்றில் சறுக்கி விளையாடும் சிறுவர்கள்

285
Advertisement

இங்கே பாருங்களேன் இந்தச் சிறுவர்கள் எவ்வளவு ஆனந்தமாக உள்ளனர்….
இதற்காக அவர்கள் கொடுத்த அல்லது செய்த செலவு என்ன?
ஒன்றும் கிடையாது- நேரம் மட்டுமே….

எந்தக் கவலையும் எந்தத் தடையும் அவர்களின் மகிழ்ச்சிக்குத்
தடையாய் இல்லை. உற்சாகமாக சேற்று மண்ணில் சறுக்கி
விளையாடுகின்றனர் இந்தச் சிறுவர்கள்.

நாகலாந்து மாநிலக் கிராமத்தில் உள்ள சிறுவர்கள்தான் இந்த
விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக சறுக்கு விளையாட்டை
நகர்ப்புற சிறுவர்கள் பூங்காக்களில் மட்டுமே விளையாட முடியும்.
அதுவும் செயற்கையாக அமைக்கப்பட்ட இரும்புச் சறுக்கில் மட்டுமே
இப்படிச் சறுக்கி விளையாடி மகிழ முடியும். அதுவும் பெற்றோர்
முன்னிலையில்தான்.

ஆனால், இந்த நாகலாந்து சிறுவர்களோ பெற்றோர் துணையின்றித்0
தைரியமாக நம்பிக்கையுடன் சறுக்கி சறுக்கி விளையாடுகின்றனர்.
இப்போதுள்ள சிறுவர் சிறுமியர் வீடே கதியென்று கிடக்கின்றனர்.

கொரோனா என்பதால் மட்டுமல்ல, அவர்களுக்கு நண்பர்களும் குறைவு.
வெளியில் சென்று விளையாடுவதற்கான இடங்களும் வாய்ப்புகளும் குறைவு.
படிப்பு படிப்பு என பெற்றோரும் விளையாடச் செல்வதற்கு அனுமதிப்பதில்லை.

இதனால் கம்யூட்டர், செல்போன்களில் கேம் விளையாடி தங்களை
மகிழ்ச்சிப் படுத்திக்கொள்கின்றனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு இன்றும் சிறப்பான பொழுதுபோக்கே
வீட்டுக்கு வெளியே சென்று நண்பர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி
விளையாடுவதுதான். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக விளங்க
மட்டுமன்றி, சிறுவயது சந்தோஷங்களை நன்கு அனுபவித்து மகிழ்கின்றனர்.

அப்போது கிடைத்த நட்புவட்டம் பெரியவர்கள் ஆன பிறகும் தொடர்கிறது.
ஒருவருக்கொருவர் உதவிசெய்து மகிழும் நட்புவட்டமாக இந்த சிறுவயது
நட்பு மலர்ந்து மணம் சேர்ப்பதுடன், சிறுவயதில் நடந்தவற்றை நினைவுகூர்ந்து
அளவளாவுவதும் மட்டற்ற மகிழ்ச்சி தருவதாக அமைகிறது.

ஆனால், நகர்ப்புற மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.
இதுபோன்ற சிறுவயது சந்தோஷத்தை அவர்கள் இழக்கின்றனர். உடலும்
பருமனாகி பசியின்றி கண்ணாடி அணிந்து என்று பல்வேறு உபாதைகளுக்கும்
ஆளாகின்றனர்.

கிராமப்புற சிறுவர்கள் விளையாடச் செல்வதற்கு எந்தச் செலவும் இல்லை.
எல்லாம் ஓசியிலேயே அமைந்துவிடுகிறது. விளையாடும்போது நண்பர்களுக்குள்
சண்டை ஏற்பட்டாலும் பிற்காலத்தில் அது அன்பு நிறைந்த நட்பாக மாறிவிடுகிறது.

இந்தச் சறுக்கு விளையாட்டில் ஒரேயொரு ரிஸ்க்… என்னன்னா…
சறுக்கி வரும்போது நடுவில் எங்காவது சிறு குழி இருந்து அல்லது
சற்றுப் பிசகினால் பின்புறத்தில் பயங்கரமான சிராய்ப்போ வேறு
காயமோ ஏற்படும்.

ஆனால், இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப விளையாட்டில்
ஏற்பட்ட ஆர்வமே இந்தக் காயத்துக்கு மருந்தாய் அமைந்துவிடும்.

உலகம் கிராமப்புறங்களில்தான் வாழ்கிறது என்பது சரிதானே…
உங்கள் குழந்தைகளையும் சறுக்கிவிளையாட அனுமதியுங்கள்.
இப்போது இல்லையேல் வளர்ந்த பிறது சிறு வயதில் கிட்டாத இந்த
சந்தோஷத்தை எண்ணிக் கவலைப்படத்தான் முடியும். உடலையும்
மனதையும் நம்பிக்கையையும் நண்பர்கள் வட்டத்தையும் அதிகரிக்கும்
இதுபோன்ற விளையாட்டை விளையாட உங்கள் குழந்தைகளை
ஊக்கப்படுத்துங்கள்.