கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் சிறுவன் அதிக நேரம் மொபைல் பயன்படுத்தியுள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார்.
நேற்று முன்தினம் சிறுவன் அதிக நேரம் மொபைல் பயன்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மொபைலை பறித்து சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுவன் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இதை பார்த்த அவரது தந்தை அதிர்ச்சி அடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.