கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்தில் சிறுவன் நடத்துனராக பணி அமர்த்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை வரை இயக்கப்படும் தனியார் பேருந்தில், நடத்துனருக்குப் பதிலாக 16 வயதுக்கும் குறைவான சிறுவன் பயணிகளுக்குப் டிக்கெட் வழங்கியுள்ளான். இதைப்பார்த்து அதிர்ச்சியைடந்த பயணி ஒருவர் அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும், பள்ளிச் சீருடை அணிய வேண்டிய வயதில் சிறுவன் பயணிகளிடம் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டுகளை வழங்குவது வேதனையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயல் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதுடன், சிறுவர்களின் உரிமைகளையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.