Monday, December 9, 2024

ஒரே மணிநேரத்தில் ஒட்டுமொத்த பிரபலங்களை பின்னுக்கு தள்ளிய 19 வயது இளைஞர்.!!

ஓர் இரவில் இணையத்தில் பிரபலமானவர்களை பாத்துருப்போம். ஆனால் பிரதீப் மெஹ்ரா என்ற 19 வயதே ஆன இளைஞர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் இணையத்தில் வைரலாகி உள்ளார் . இதற்கான காரணம் தான் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

திரைப்பட தயாரிப்பாளரும் எழுத்தாளருமான வினோத் கப்ரி தனது டீவ்ட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்தார் . அத்துடன் , ” இது தூய தங்கம் , நேற்று இரவு 12 மணியளவில் நொய்டா சாலையில், இந்த சிறுவன் தோளில் பையை வைத்துக்கொண்டு மிக வேகமாக ஓடுவதை பார்த்தேன்.

நான் நினைத்தேன் சில பிரச்சனைகள் இருக்கும், லிப்ட் கொடுக்க வேண்டும் என்று ஆனால் பலமுறை லிப்ட் கொடுக்க முயன்றும் அதை நிராகரித்தார் அந்த குழந்தை, காரணம் கேட்டால் இந்த குழந்தையின் மீது காதல் வயப்படுவீர்கள். என்று உணர்ச்சிப்பூர்வமாக இந்த வீடியோ வை பகிர்ந்துள்ளார்.

வீடியோவில் , நொய்டா சாலை ஒன்றில் இரவு நேரத்தில் ஒரு இளைஞர் தோலில் பை ஒன்றை மாட்டிக்கொண்டு வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறார். அப்போது அந்த சாலை வழியாக வந்த திரைப்பட தயாரிப்பாளரும் எழுத்தாளருமான வினோத் கப்ரி , அந்த இளைஞர் ஓடிக்கொண்டு இருப்பதை கண்டு ஏதோ அவசரம் என நினைத்து தன் காரில் லிப்ட் குடுக்க நினைத்தார்.

காரை இந்த இளைஞர் அருகில் ஓடிச்சென்று , நான் உன்னை வீட்டில் விடுகிறேன் என சொல்கிறார் அதற்கு அந்த இளைஞர் , வேண்டாம் நான் ஓடியே வீட்டிற்கு சென்று விடுவேன் என கூறுகிறார்.

நீ ஏன் ஓடிக்கொண்டு இருக்கிறாய் என வினோத் கப்ரி அவரிடம் காரணத்தை கேட்க, அந்த இளைஞர் அளித்த பதில் தான் அனைவரின் இதயத்தை கவர்ந்துள்ளது.அந்த இளைஞர் கூறுகையில் , நான் செக்டர் 16 – ல் தனியார் உணவு நிறுவனம் ஒன்றும் வேலை செய்கிறேன். நான் உங்களுடன் காரில் வந்தால் எனக்கு ஓடுவதற்கு நேரம் இருக்காது . நான் இராணுவத்தில் சேர விரும்புகிறேன்.காலை நேரம் வேலைக்கு சென்றுவிடுவேன் எனக்கு ஓட நேரம் இருக்காது . என் அம்மா உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளார்,நான் என் சகோதரன் உடன் தங்கியுள்ளேன் என கூறினார் அந்த இளைஞர்.

மெஹ்ராவின் உறுதியைக் கண்டு கவரப்பட்ட கப்ரி, வேகமாக ஓடும் இளைஞர்களுடன் சேர்ந்து தனது காரில் பயணித்து, அவர்களது உரையாடலின் வீடியோ வைரலாகப் போகிறது என்று அவரிடம் கூறினார்.பதிலுக்கு சிரித்த மெஹ்ரா “யார் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள்?” , “இது வைரலானால் பரவாயில்லை, நான் தவறு செய்வது போல் இல்லை” என்று கூறினார்.

கடைசி முயற்சியாக கப்ரி மெஹ்ரா உடன் இரவு உணவு சாப்பிட முன்வந்தார். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருக்கு அந்த இளைஞன் மீண்டும் திரைப்படத் தயாரிப்பாளரின் உதவியை மறுத்து, “இல்லை, என் மூத்த சகோதரன் இரவு ஷிப்டில் வேலை செய்ததால் இப்போது தனக்காக சமைக்க முடியாது என்பதால் பசியுடன் இருப்பார்” என்று கூறினார்.

வினோத் கப்ரின் மனதை ஈர்த்த மெஹ்ராவை “amazing” என தன் நல்வாழ்த்துக்களை சொல்லி அங்கிருந்து விடைபெற்றார் வினோத் கப்ரி .

இவர்களிடையே நடந்த இந்த உரையாடலை அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து ,சிலமணி நேரத்தில் வைரலானது. இணையவாசிகளின் இதன்களை தோட்ட பிரதீப் மெஹ்ராக்கு பாராட்டுகள் குவித்துவருகின்றது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!