டெல்லியில் பள்ளிகளை குறிவைத்து தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வருவதால் பெற்றோர் மற்றும் பள்ளிக்குழந்தைகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள துவாரகாவில் உள்ள பிரபல பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், எந்த நேரத்தில் அது வெடிக்கும் என்றும் பள்ளிக்கு ஒரு இ மெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் பள்ளியில் இருந்து வெளியேற்றியது.

தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி விடுமுறை காலத்தை முடித்து, மீண்டும் வகுப்புகள் தொடங்கிய சூழலில், இந்த வகையான மிரட்டல்கள் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.