மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தாய்லாந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 176 பயணிகள், 6 ஊழியர்கள் என 182 பேர் இருந்தனர்.
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து அந்த விமானம் உடனடியாக சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது.
இந்த விவகாரத்தில், 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
