Saturday, March 22, 2025

கலைக்கண்காட்சிக்கு தயாராகிய BMW iX

பிஎம்டபிள்யூ iX எலக்ட்ரிக் எஸ்யூவி, இந்திய கலை கண்காட்சிக்காக கலைஞர் ஃபைசா ஹசன் வடிவமைத்துள்ளார்

The Future is Born of Art’ என்பது BMW இந்தியா மற்றும் இந்தியா ஆர்ட் ஃபேரின் ஒரு தனித்துவமான முயற்சியாகும், இது வளர்ந்து வரும் இந்திய கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றும் கலை, நிலைத்தன்மை , புதுமைகளை மேம்படுத்துவதற்கான BMW குழுமத்தின் அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கலைஞரான ஃபைசா ஹசனால் வடிவமைக்கப்பட்ட BMW iX எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டது ஜேர்மனியின் சொகுசு கார் தயாரிப்பாளரான BMW.

நிலையான வடிவமைப்பு தீம் கொண்ட BMW iX, ஏப்ரல் 28 முதல் மே 1, 2022 வரை தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய கலை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

உண்மையான நபர்களை வரைவதோடு, ‘சுனோ’ போன்ற உருது வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தி உள்ளார் , அதாவது நம்பிக்கை என்று பொருள். இது BMW iX இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார SUV ஆகும்.

Latest news