10 கிராம் வெந்தயம் போதும்….Sugar தொல்லைக்கு simple தீர்வு!

127
Advertisement

இயல்பாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டுள்ள வெந்தயத்திற்கு, அதைத் தாண்டி பல மருத்துவ பயன்களும் உள்ளன.

சாதாரணமாக நம் சமையலறை அஞ்சறை பெட்டிக்குள் அடங்கி இருக்கும் வெந்தயம் செரிமான கோளாறுகளை சரி செய்வது, எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமில்லாமல் பலரையும் பாடாய் படுத்தும் சக்கரை நோய்க்கும் சிறந்த தீர்வாக அமைகிறது என்றால் நம்ப முடிகிறதா?

வெந்தயத்தின் முழுமையான  மருத்துவ பயன்களை பெற அவற்றை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், type 2 சக்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதில் வெந்தயம் சிறப்பாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக, 10 கிராம் அளவிற்கு வெந்தயத்தை வெந்நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து, பின் வடிகட்டி குடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நீரில் சுவைக்காக எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை தேன் கலந்து குடிக்கலாம். மேலும், வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. Acid reflux, நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலுக்கு எதிராக போராடும் வெந்தயம், பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புகளை குறைக்கிறது.

வெந்தய விதைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், உடலில் உள்ள free radicals அழிக்கப்பட்டு, சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும். சுகப்பிரசவத்தை தூண்டும் உட்பொருளாக செயல்படும் வெந்தயம், வீக்கம் மற்றும் தசைவலிகளுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.