Wednesday, March 26, 2025

பல பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய பாஜக நிர்வாகி கைது

தாம்பரம் அருகே உள்ள திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் (24). இவர் பாஜகவில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடந்த 2018ம் ஆண்டு முதல் பழகி பின்னர் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் லியாஸ் தமிழரசன் அந்தப் பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் அதனை அவருக்கு தெரியாமல் வீடியோவாக பதிவும் செய்தியை வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் லியாஸ் தமிழரசன் பல இடங்களுக்கு அந்தப் பெண்ணை அழைத்து சென்று பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் லியாஸ் தமிழரசனிடம் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது லியாஸ் தமிழரசன் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதோடு தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியும் உள்ளார்.

பின்னர் லியாஸ் தமிழரசன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண் லியாஸ் தமிழரசன் மீது சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் பல பெண்களை ஏமாற்றியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீஸார் நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.

Latest news