Friday, December 27, 2024

அதிமுக கூட்டணியில் பாஜக ஆனா பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கா?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றும், இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மேலும், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து கட்சிதான் அதிமுகதான் முடிவு செய்யும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பாஜக தனித்துப் போட்டியிடும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாஜக தொண்டர்கள் நிற்க வேண்டும், தலைவர்கள் நிற்க வேண்டும், கட்சியினர் நிற்க வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. அதே நேரத்தில் ஒரு பெரிய கட்சியாக இருக்கின்ற அதிமுகவும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதிமுகவின் முக்கியமான தலைவர்கள் பாஜகவுக்கு முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 10 சதவீத இடங்களை ஒதுக்கியிருந்தார்கள். நாங்கள் அதிகமாக கேட்டிருந்தோம்.

எங்கள் தரப்பு பட்டியலை கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால், அதிமுக தலைவர்களுக்கு அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்களை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை; அவர்களால் கொடுக்க முடியாத சூழலும் இருந்தது…

Latest news