Wednesday, March 12, 2025

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பாஜக பெண் நிர்வாகி கைது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் பொன்முடி, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விழுப்புரம் சென்றார். அப்போது அவர் மீது சேறு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க. நிர்வாகி விஜயராணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விஜயராணியை திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Latest news