71 ஆயிரம் விலைமதிப்புள்ள பைக்கின் நம்பரை
15 லட்ச ரூபாய்க்கு இளைஞர் வாங்கிய செயல்
ஆன்லைனில் வைரலாகிவருகிறது.
புதிய வாகனம் வாங்கும்போது பலரும் ஃபேன்சி
நம்பர் பெறவே ஆசைப்படுவார்கள். இருப்பினும்
சண்டிகரில் உள்ள ஒருவர், தான் விரும்பிய பதிவு
எண்ணைப் பெறுவதற்காகப் பெருந்தொகையை
செலவழித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில்தான் இந்த விநோதம்
நிகழ்ந்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா வாகனத்தின் உரிமையாளரான
பிரிஜ் மோகன் என்ற நபர் சூப்பர் விஐபி 0001 என்ற
பதிவெண்ணைப் பெறுவதற்காக 15 லட்சத்து 44 ஆயிரம்
ரூபாய் செலவுசெய்துள்ளார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த டூ வீலரின்
மொத்தவிலையே 71 ஆயிரம் ரூபாய் மட்டுந்தான்.
இந்த எண்ணுக்கான ஏலம் ரூ 5 லட்சத்தில் தொடங்கியது.
இறுதியாக பிரிஜ் மோகன் என்ற வாகன உரிமையாளர்
15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் அந்த
நம்பரை வாங்கிவிட்டார். இதுதான் தற்போது வலைத்
தளங்களில் வைரலாகிவிட்டது.
ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால்
கட்டார், அம்மாநிலத்துக்கு கூடுதல் வருவாய் ஈட்டு
வதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தார். அந்தத்
திட்டத்தின்படி, 0001 என்ற எண்ணை ஏலத்தில் விற்கும்
திட்டம் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 18 கோடி ரூபாயை
ஈட்டமுடியும் என்று அம்மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த ஏலத்தில்தான்
இந்த விநோதம் நிகழ்ந்துள்ளது.
சண்டிகரில் 0001 என்ற எண்ணை இவ்வளவு பெரிய
தொகைக்கு விற்பது முதன்முறையல்ல. 2012 ஆம்
ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் காரின் உரிமையாளர்
ஒருவர் 26 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது
குறிப்பிடத்தக்கது.