Saturday, December 6, 2025

பீகார் தேர்தல் : 2ம் கட்ட வாக்குப்பதிவில் 14.55 சதவிகித வாக்குகள் பதிவு

பீகார் சட்டசபை தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவில், காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.08 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆயிரத்து 302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News