ஓவலில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியில், மிகப்பெரும் மாற்றம் ஒன்றை இந்திய அணி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, ஜூலை 31ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை டிரா செய்ய முடியும். இல்லை எனில் இங்கிலாந்து 2-1 என தொடரை கைப்பற்றி விடும்.
இதனால் நல்ல பிளேயிங் லெவனை கட்டமைக்க வேண்டிய, கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் ஓவல் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், 5 முழுநேர பவுலர்களுடன் ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்தியா இருக்கிறது.
அதன்படி அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், முஹம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் என 5 பவுலர்கள் 5வது டெஸ்டில் ஆட இருக்கின்றனராம். ஓபனர்களாக கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் மற்றும் 3வது இடத்தில் கேப்டன் கில் 4வது இடத்தில் துருவ் ஜூரல் 5,6வது இடங்களில் ஜடேஜா, சுந்தர் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் சாய் சுதர்சன் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதன்படி பார்த்தால் ரிஷப்புக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்ட, தமிழக வீரர் ஜெகதீசனுக்கும் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான்.