Saturday, April 19, 2025

“இந்துக்களே வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்” : பாஜக மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில், ஹிந்துக்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியது.

இந்நிலையில் மூத்த தலைவர் திலீப் கோஷ் பேசியதாவது : இந்துக்கள் தங்கள் வீடுகளில் டிவி, பிரிட்ஜ் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். ஆனால், இதுவரை தங்கள் வீடுகளுக்கு என எந்த ஆயுதத்தையும் வாங்கியது இல்லை.எனவே, தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம் என பேசியுள்ளார்.

திலீப் கோஷின் பேச்சுக்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தலைவரின் இந்தப் பேச்சு வெறுப்புணர்வை துாண்டும் வகையில் அமைந்துள்ளது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Latest news