பூசணிக்காயில் மஞ்சள் பூசணி, வெண்பூசணி என்று
இரண்டுவகை உள்ளது. இதில், வெண்பூசணியைத்
திருஷ்டிப் பூசணி என்றும், சாம்பல் பூசணி என்றும் சொல்வர்.
சாம்பல் பூசணியில் அதிக அளவு பிராண வாயு உள்ளது.
இதனைத் திருஷ்டி கழிப்பதற்காகப் புதுவீட்டின் முன்பு
கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
பூசணிக்காய் சாப்பிடுவோருக்கு உடலும் மனமும் கூர்மையாகிறது.
புத்திக்கூர்மையும் புத்துணர்வும் சமநிலை அடைகிறது.
பூசணிக்காய் உடலில் உள்ள சூட்டைக் குறைத்து
சமநிலையில் உடலை வைத்திருக்கும்.
சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க் கடுப்பை நீக்கி நீர் நன்கு பிரிய உதவுகிறது.
நீரிழிவைக் கட்டுப்படுத்துகிறது.
மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் வெண்பூசணிக்கு உண்டு.
இரத்த சோகையை நீக்கும். இரத்தம் சுத்தமாகவும் உதவும்.
நாவறட்சி நீங்க வெண்பூசணி சாப்பிடலாம்.
நரம்புக் கோளாறுகளை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும்.
ஜீரணக் கோளாறுகளை அகற்றிப் பசியைத் தூண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆகவே, தயக்கம் இல்லாமல் வெண்பூசணி சாப்பிடுங்க.
நோயின்றி வாழுங்க.