கிரீன் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே போக தேவையில்லை என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆம் அந்த அளவுக்கு ஆப்பிளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிளில் இன்னும் கலோரி மிகக் குறைவு. ஊட்டச்சத்துக்கள் அதிகம். தினமும் நம்முடைய டயட்டில் க்ரீன் ஆப்பிளை எடுத்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

கண்கள் மற்றும் பார்வை மேம்பாடு

கிரீன் ஆப்பிளில் வைட்டமின் ஏ (Vitamin A) நிறைந்துள்ளது. இது பார்வையை பலப்படுத்துவதோடு, கண்கள் வறண்டு போவதைத் தடுக்கும் மற்றும் கண்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகளை குறைக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது

சிவப்பு ஆப்பிளைப் போன்ற அதிக சர்க்கரை இல்லாத கிரீன் ஆப்பிள், புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையுடன் உள்ளது. இதனால் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. மேலும், வயிறு நிறைவாக உணரப்படுவதால் அடிக்கடி பசிப்பது போன்ற உணர்வும் குறையும்.

நார்ச்சத்து நிறைந்தது – செரிமானத்திற்கு உதவும்

கிரீன் ஆப்பிள் முழுக்க முழுக்க நார்ச்சத்து (fiber) நிறைந்தது. இது மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தமான கோளாறுகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. அதே நேரத்தில், பெக்டின் (pectin) எனப்படும் காம்பவுண்ட், வயிற்றுக்குள் ஆரோக்கியமான பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது.

எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுவூட்டும்

பல பழங்களில் கால்சியம் குறைவாக இருந்தாலும், கிரீன் ஆப்பிளில் கால்சியம் சத்து உள்ளது. தினமும் ஒரு பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைய உதவும்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் ஆப்பிள் சருமத்தை மெருகூட்டுவதோடு, இளமையான சருமத்தையும் தக்கவைக்க உதவுகிறது.

Related News

Latest News