இளமையில் முதுமையைத் தடுக்க

308
Advertisement

திராட்சைப் பழத்தை விரும்பிச் சாப்பிடும் நாம்
அதன் விதைகளைத் தூக்கி எறிந்துவிடுகிறோம்.
திராட்சை விதையின் நன்மைகளைப் பற்றி
அறிந்திருக்காததே இதற்குக் காரணம்.

திராட்சையில் ஊட்டத் சத்துகள் மற்றும் அத்தியாவசியக்
கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் மற்றும்
சக்திவாய்ந்த பிளேவோனாய்டுகள் போன்றவை
ஏராளமாக நிறைந்துள்ளது.

ஆனால், திராட்சை விதைகளில் சக்தி வாய்ந்த
ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் தாவர வகை
உட்பொருட்களான OPCs உள்ளன. இந்த OPCs
உடலில் ஃபிரீராடிக்கல்களை அழிக்க உதவுகிறது.

இளமையிலேயே சிலர் முதுமைத் தோற்றத்தை அடைவர்.
இதைத் தடுக்க உதவுகிறது திராட்சை விதை. குறிப்பிட்ட
நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் தடுக்கும்.

இதயம், இரத்த நாளப் பிரச்சினைகள், பெருந்தமனித் தடிப்பு,
உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றைத்
திராட்சை விதைச் சாறு பயன்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் ஏற்படும்
வீக்கத்தைத் தடுக்கும். வைட்டமின் சியைவிட 30 முதல் 50
மடங்கு அதிகம் பலன் தரக்கூடியது திராட்சை விதைகள்.

நீண்டநேரம் உட்கார்ந்துகொண்டே பணிபுரிபவர்கள்
தினமும் திராட்சைப் பழத்துடன் அதன் விதைகளையும்
சாப்பிட்டு வந்தால் காலில் ஏற்படும் வீக்கத்தைத் தடுக்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் திராட்சை
விதையை சாப்பிடலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு
களைக் குறைக்கும் சக்திகொண்டது திராட்சை விதை.
மேலும், உடம்பின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும்.

மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் குறைவு.

மனதை ஒருமுகப்படுத்தி அறிவாற்றல் செயல்பாட்டைத்
தூண்டி நல்ல மனநிலையையும் ஏற்படுத்துகிறது.

நரம்புச் சிதைவு நோய், அல்சைமர் போன்றவற்றைத் தடுக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்.

நுரையீரலைப் பாதுகாக்கும். நுரையீரலில் தொற்று நோய்
ஏற்படாமல் தடுக்கும்.

சளி, காய்ச்சல் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.
சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். ஆகவே,
திராட்சைப் பழத்தோடு அதிலுள்ள விதைகளையும் சாப்பிடுங்கள்.