அலாரம் வரும் முன்னே, யானை வரும் பின்னே

63
Advertisement

யானைகள் அவ்வப்போது தண்ணீர் தேடியோ
இரை தேடியோ ஊருக்குள் வந்துவிடுகின்றன.

ஊருக்குள் வரும் யானைகள் விவசாயப் பயிர்களை
நாசப்படுத்திவிடுவதுடன் குடியிருப்புப் பகுதிகளுக்குள்
புகுந்த மக்களையும் தாக்கத் தொடங்குகின்றன. சிலசமயம்
கால்நடைகளையும் வேட்டையாடத் தொடங்குகின்றன.
வீடுகளையும் சேதப்படுத்தி விடுகின்றன.

மலை மாவட்டமான நீலகிரியில் இந்த மாதிரி சம்பவங்கள்
அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதனைத் தவிர்ப்பதற்காகக்
கூடலூர் பகுதியின் மூன்று இடங்களில் சென்சார் அலங்காரக்
கருவி பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement

யானைகள் ஊருக்குள் புகுந்தால் இந்தக் கருவி ஒலிக்கும்.
இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ள
முடியும். அதேசமயம் வனத்துறை ஊழியர்கள் விரைந்துவந்து
யானையை விரட்டவும் வழிபிறக்கும். பொதுமக்கள், யானை
தாக்குவதிலிருந்து காப்பாற்றப்படுவர்.

வனத்துறையின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை வரவேற்கத்
தக்கதுதான்.

காடுகளை அழிக்காமலிருந்தால் காட்டு யானைகள் ஊருக்குள்
வரப்போவதில்லை. யானைகள் ஊர்சுற்றிப் பார்ப்பதற்காக ஊருக்குள்
வருவதில்லை. இரை தேடியும், தண்ணீர் தேடியும்தான் வருகின்றன.

யானையின் வாழ்விடங்களை அழிக்காமல் இருந்தாலே இப்பிரச்சினை
தானாகவே தீர்ந்துவிடும்.

மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே என்னும் பழமொழியை
அலாரம் வரும் முன்னே யானை வரும் பின்னே என மாற்றிக்கொள்ள வேண்டும்.