Wednesday, May 21, 2025

BCCI எடுத்த ‘அதிரடி’ முடிவு KL ராகுலுக்கு அடித்தது ‘Jackpot’

நடப்பு IPL தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக கேஎல் ராகுல் ஆடி வருகிறார். கடந்தாண்டு லக்னோ அணியின் கேப்டனாக வலம்வந்த ராகுல், அதன் உரிமையாளர் கோயங்காவால் கேப்டன் பதவியையே வெறுத்து ஒதுக்கிவிட்டு, DCயில் சாதாரண வீரராக ஆடிவருகிறார்.

டெல்லிக்காக இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள ராகுல் 493 ரன்களை எடுத்துள்ளார். குறிப்பாக குஜராத்திற்கு எதிராக கடைசிவரை ஆட்டமிழக்காமல் 112 ரன்களை அடித்து அசத்தினார். இதன்மூலம் வெறும் 224 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை குவித்து, புதிய சாதனை ஒன்றையும் படைத்தார்.

இந்தநிலையில் ராகுலின் இந்த அதிரடி ஆட்டத்தால் அசந்து போன BCCI, அவரின் கடின உழைப்புக்கு பரிசாக T20 அணியில் மீண்டும் இடம் கொடுக்க முடிவு செய்துள்ளதாம். ராகுல் கடைசியாக 2022ம் ஆண்டு இந்திய T20 அணியில் இடம் பெற்றிருந்தார்.

அதற்குப்பிறகு அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தன. தற்போது T20யில் ரோஹித், விராட் இருவரின் இடத்தையும் நிரப்ப வேண்டியிருப்பதால், BCCI தாராள மனதுடன் வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரில், ராகுலுக்கு இடம் வழங்கிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Latest news