Wednesday, December 17, 2025

கோலியை அவமானப்படுத்திய BCCI? ‘சிங்கத்தை சீண்டுறாங்க’ ரசிகர்கள் கொந்தளிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவாக வலம்வந்த King கோலி, அண்மையில் ஓய்வு அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை பரிசாக அளித்தார். 36 வயதிலும் Fitness உடன் திகழும் விராட்டின் ஓய்வு முடிவை இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

IPL சேர்மன் அருண் துமால் கூட சமீபத்தில், விராட் தனது ஓய்வு முடிவினை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இந்தநிலையில் விராட்டை அவமதிப்பது போல BCCI ஒரு வேலையை செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய A அணியில் விளையாடி வரும் பவுலர் முகேஷ் குமார், விராட்டின் ஜெர்ஸி எண் 18ஐ அணிந்து விளையாடி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆற்றிய பங்களிப்பினால், அவர்களின் ஜெர்ஸி எண் இனிமேல் யாருக்கும் கிடையாது என BCCI அறிவித்துள்ளது. சச்சின், தோனி போல விராட்டும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

சொல்லப்போனால் சச்சினின் எக்கச்சக்க சாதனைகளை கோலி முறியடுத்துள்ளார். அப்படியிருக்க அவரின் ஜெர்ஸி எண்ணை எப்படி இன்னொரு வீரருக்கு BCCI அளிக்கலாம்? என்று, ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். இதையடுத்து சமூக வலைதளங்களில், ” எங்க தலைவன அவமானப்படுத்த நினைக்கிறீங்களா?

அவர்கிட்ட வம்பு இழுக்குறத ஒரு கொள்கையாகவே வச்சு இருக்கீங்க போல”, என்று, விதவிதமாக BCCIஐ வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால் விரைவில் முகேஷ் குமார் அவரின் ஜெர்ஸி நம்பரை மாற்றிட, வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

Related News

Latest News