IPL தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் கூட BCCIயின் மொத்த கவனமும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே உள்ளது. ஒருவேளை இதில் இந்திய அணி மண்ணை கவ்வினால் ரோஹித், விராட் இல்லாதது தான் காரணம் என்று, நாலாபுறமும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்.
எனவே பார்த்துப்பார்த்து ஒவ்வொரு விஷயங்களையும் BCCI செய்து வருகிறது. இதனால் தான் டெஸ்ட் தொடருக்கான கேப்டனை அறிவிப்பதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கின்றனர். இந்தநிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் வேண்டுமெனில், பவுலர்கள் குறைந்தது 10 ஓவர்களை சரியான லைன் அண்ட் லெந்த்தில் வீச வேண்டும் என்று BCCI செக் வைத்துள்ளது.
தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், இந்த விஷயத்தில் மிகவும் Strict ஆக இருக்கிறாராம். எனவே IPL தொடரில் 4 ஓவர்களை வீசுவதற்கே திணறும் ஷமி போன்ற சீனியர் பவுலர்களுக்கு, இங்கிலாந்து டெஸ்டில் இடம் கிடைக்காது என்பது தெரிய வந்துள்ளது. இதனால் முஹம்மது ஷமிக்கு பதிலாக, Arshdeep Singh அணியில் இடம் பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.