வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள சுற்றிக்கையில்,
உயிரிழந்த வாடிக்கையாளரின் டிபாசிட் கணக்குகள், லாக்கர் டெபாசிட்டுகள், பாதுகாப்பில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கேட்டு, குடும்பத்தினர் அல்லது நியமனதாரர் விண்ணப்பித்தால், விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள், அனைத்தையும், உரியவரிடம் வங்கிகள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
லாக்கர் கணக்கை முடிக்க 15 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 4 சதவீத ஆண்டு வட்டியை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும், வங்கித் துறையில், ‘கிளெய்ம்’ நடைமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவுகள் வெளியிடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாரிசுதாரரின் சுய உறுதிமொழி, மற்ற வாரிசுதாரர்களிடம் இருந்து பெறப்படும் ஆட்சேபனை இல்லை என்ற கடிதம் ஆகியவை அவசியம். அதிக தொகை கணக்குகளின் கிளெய்முக்கு, உத்தரவாத பத்திரங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆவணங்களை பெற வேண்டும் என்றும் ரிசர்வ்கி தெரிவித்துள்ளது.