Thursday, March 27, 2025

தண்ணீர் என நினைத்து குடித்த குழந்தை உயிரிழந்த சோகம்

கடலூர் மாவட்டம் வடலூரில் சூர்யா, சினேகா துன்ற தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளது. இதில் நான்காவது பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அடுப்பு பற்ற வைப்பதற்காக வாட்டர் பாட்டில் வைத்திருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் குழந்தை மைதிலியை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest news