அசீமின் பிக் பாஸ் கோப்பைக்கு பின் உள்ள கமல் ஹாசனின் அரசியல்!

161
Advertisement

அனைவரும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

போட்டியில் வெற்றி பெற்ற அசீமுக்கு 50 லட்சம் பரிசுத்தொகையும், மாருதி சுசுகி நிறுவனத்தின் ப்ரீசா (Brezza) காரும் வழங்கப்பட்டது.

ஆரம்ப முதலே அளவுக்கதிகமான சர்ச்சைகள், கோபத்தின் வெளிப்பாடுகள், சக போட்டியாளர்களை அவமதித்தல், நாகரீகமற்ற கருத்துக்களை பதிவு செய்தல் என இருந்தாலும், இறுதி வெற்றியை அசீம் எப்படி கைப்பற்றினார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Straight Forward பேர்வழி என 2K கிட்ஸ், சீரியல் விரும்பிகள் ஒரு புறம் அசீமுக்கு முட்டு கொடுக்க, இந்த வெற்றிக்கு பின் கமலின் அரசியல் தலையீடு இருக்குமோ என்ற கோணத்தை அரசியல் நோக்கர்கள் கையில் எடுத்துள்ளனர்.

பிக் பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் நேரடியாக பிரச்சாரம் செய்தார். திருமாவளவன் உடன் கமல் இதுவரை அரசியல் கூட்டணியில் ஈடுபட்டதில்லை.

இந்நிலையில், விக்ரமன் வெற்றி பெறும் பட்சத்தில், அது திருமாவிற்கு சாதகமான அரசியல் நகர்வாக இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, அசீமின் வெற்றிக்கு கமலின் அரசியல் செயல்பாடு ஒரு காரணமாக இருக்குமோ என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.