கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பெண்ணுக்கு வேலைபோன பரிதாபம்

262
Advertisement

கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பெண்ணுக்கு
வேலை பறிபோன பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் இலியானாஸ் மாகாணத்தின்
சுரங்கப்பாதை ஒன்றில் ஃபாஸ்ட் புட் உணவகம்
ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வந்தார் அரசெலி சோடெலோ என்னும் பெண்.

கடந்த 2021 ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திடீரெனக்
கொள்ளைக்காரன் ஒருவர் உணவகத்துக்குள் புகுந்து
துப்பாக்கியை நீட்டி பணம் தரும்படி மிரட்டினான்.
ஆனால், அரசெலி பணம் தரவில்லை. மாறாக, கொள்ளையனை எதிர்த்துப் போராடினாள்.

என்றாலும் அரசெலியிடமிருந்து பணப் பையைக் கொள்ளையன்
பறித்துக்கொண்டான். இதனால் ஆவேசமான அவள் முரட்டுத்தனமாகத்
தாக்கத் தொடங்கினாள். திடீர்த் தாக்குதலில் நிலைகுலைந்துபோன
கொள்ளையனிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துக்கொண்டாள்.

கொள்ளையனும் விடவில்லை. அவளிடமிருந்து பணப்பையைப்
பிடுங்கிக்கொண்டான். ஒரு கையில் பணப்பையை வைத்துக்கொண்டு
அவளிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்க முயன்றான்.

பதிலுக்கு சோடெலோ கொள்ளையனைத் துப்பாக்கியாலும் தாக்கத் தொடங்கினாள்.
சோடெலோவின் தாக்குதலை அவனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை.

அதேசமயம், கொள்ளையனின் மேலாடையையும் பறித்துக்கொண்டாள்.
மேலும், கொள்ளையனிடம் உன் முகத்தைக் கேமராவில் காண்பி
என்று மறுபடியும் மறுபடியும் கூறினாள்.

இதனால், செய்வதறியாது திகைத்த கொள்ளையன் பணப் பையை
அவளிடம் தந்துவிடுவதாகவும், தன் சட்டை மற்றும் துப்பாக்கியைத்
தரும்படியும் கெஞ்சினான். சோடெலோ அதற்கு இசையவில்லை.
மாறாக, கொள்ளையனின் தலையில் உதைக்கத் தொடங்கினாள்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில்
வைரலானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சோடெலோவின்
துணிச்சலைப் பாராட்டத் தொடங்கினர்.

பாராட்டிக் கௌரவிக்கப்படவேண்டிய சோடெலோ
பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.