வண்டலூர் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது ஆட்டோ ஒன்று மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் தாமஸ் (41) என்பவர் உயிரிழந்துள்ளார்.
லாரி மீது ஆட்டோ வேகமாக மோதியதில் ஆட்டோவின் கண்ணாடி உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் லோகநாதன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.