Saturday, December 27, 2025

ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதலான 416 வாகனங்கள் ஏலம்

சேலம் மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதலான 416 வாகனங்கள் 1 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட உணவு பொருட்களை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், 413 டன் ரேஷன் அரிசி பரிமுதல் செய்யப்பட்டது.

அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 416 வாகனங்கள் 1கோடியை 55 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

Related News

Latest News