ரயில் பயணிகள் கவனத்திற்கு…

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட நிலைய உள்கட்டமைப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, வருகை மற்றும் பார்சல் பிரிவுகளுக்கான புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக, நடைமேடை 1 முதல் 5 வரை 18 மீட்டர் அகலமும், 120 மீட்டர் நீளமும் கொண்ட இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக நடைமேடைகள் 1 முதல் 5 வரையிலான தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, நடைமேடை 4-ல் பள்ளம் தோண்டி தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரையிலான நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.

முதல் கட்ட பணிகள் முடிந்ததும், நடைமேடைகள் 6 முதல் 8 வரை இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மூன்றாம் கட்டமாக 9 முதல் 11 வரை நடைமேம்பாலம் அமைக்கப்படும். அப்போது இரவு நேர மின்சார ரெயில் சேவைகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Related News

Latest News