வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் தனது பிரசாரத்தினுள் ஆம்புலன்ஸ் நுழைந்ததால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பரப்புரைக்கு இடையூறு செய்ய திமுக அரசு ஆம்புலன்ஸ்களை ஏவி விடுவதாக குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து திருச்சி துறையூரில் ஈபிஎஸ் பிரசார கூட்டத்திற்குள் 108 ஆம்புலன்ஸ் நுழைந்ததால் ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் 8 மாத கர்ப்பிணியான உதவியாளரை தாக்கினர்.
இந்நிலையில் ஆம்புலன்ஸின் ஓட்டுநர் மற்றும் கர்ப்பிணி தாக்கப்பட்ட விவகாரத்தில் 4 அதிமுக நிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.