Saturday, February 15, 2025

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்

வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

தற்போது, ​​மாதத்திற்கு 5 முறை ஏடிஎம்களில் இருந்து இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு, பணம் எடுப்பதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த சேவை கட்டணத்தை ரிசர்வ் வங்கி அதிகரிக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏடிஎம்களில் இருந்து 5 முறை பணம் எடுத்த பிறகு, ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.21 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரூ.22 ஆக அதிகரிக்க தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.

Latest news