CPR செய்து 4 மாத குழந்தையை காப்பாற்றிய SWAT அதிகாரி

352
Advertisement

SWAT பாதுகாவலர்கள் பொதுவாக ,ஆபத்தான சூழ்நிலைகள், சவாலான தருணங்கள் , கலவரங்கள் உள்பட ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்வார்கள்.

இந்நிலையில் அட்லாண்டாவின், மார்ட்டின் லூதர் கிங் காரிடார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுருந்தார் SWAT சிறப்புக் காவல் அதிகாரி ஒருவர்.

அவ்வழியாக கார் ஒன்று அதிவேகமாக கடந்து சென்றது அத்துடன் அதிகப்படியான ஒலி எழுப்பியும் சென்றதால்,அந்த காரை பின்தொடர்ந்து சென்றார் பணியில் இருந்த SWAT சிறப்புக் காவல் அதிகாரி , ஒரு கட்டத்தில் அந்த கார் நிறுத்தப்பட்டு உள்ளே இருந்து பெண் ஒருவர் தன் கைக்குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக கதறிப்படி அதிகாரியிடம் உதவி கேட்டுள்ளார்.

சூழ்நிலையை உணர்ந்த காவல்துறை அதிகாரி , குழந்தையை கையில் வாங்கி உயிர்காக்கும் முதல் உதவியாக CPR ஐ செய்கிறார்.சில நிமிடங்கள் குழந்தையின் இதயப்பகுதியை அமுக்கி இதயத்துடிப்பை மீண்டும் கொண்டுவர போராடினார்.வாய் மூலம் குழந்தையின் வாயை வைத்து குழந்தையின் மூச்சை வரவழைக்க செய்த முயற்சி பலன் அளித்தது.

குழந்தையின் மூச்சு திரும்ப வர ,உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்சில் குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதனை அட்லாண்டா காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தததையடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.