மத்திய அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்.. LPG-ல் இருந்து PNG-க்கு மாறும் மக்கள்!!

உலகளவில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக எரிசக்தி விநியோக அமைப்பு அழுத்தத்தை சந்தித்தாலும், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விநியோக மையங்களில் எந்தவித குறைபாடுகளும் இல்லை என்றும், நுகர்வோருக்கு தேவையான அளவில் சிலிண்டர்கள் கிடைக்கின்றன என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விநியோகச் சங்கிலியில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க அரசு டிஜிட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது 98% எல்பிஜி முன்பதிவுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகின்றன. மேலும், ‘டெலிவரி அங்கீகாரக் குறியீடு’ (DAC) முறையின் மூலம் 92% விநியோகங்கள் பாதுகாப்பாக வழங்கப்படுகின்றன. இந்த முறையில், நுகர்வோரின் கைபேசிக்கு அனுப்பப்படும் குறியீட்டை சரிபார்த்த பிறகே சிலிண்டர் வழங்கப்படுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, 5 கிலோ சிலிண்டர்களின் இருப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து அவற்றின் விநியோகம் எளிதாக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சிறிய சிலிண்டர்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

வர்த்தக மற்றும் ஆட்டோ எல்பிஜி பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை 62% உயர்ந்துள்ளது. தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேவை அதிகமாக உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த PNG மற்றும் PNG பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. உரத் தொழிற்சாலைகளுக்கு 95% எரிவாயு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதுடன், மற்ற தொழில்களுக்கு 80% வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. PNG வலையமைப்பை விரிவுபடுத்த சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related News

Latest News