இந்த 2025ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர், வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்ஹாங் உட்பட, மொத்தம் 8 நாடுகள் கலந்து கொள்கின்றன.
பொதுவாக இந்த தொடர் T20 அல்லது ஒருநாள் பார்மெட்டில் நடைபெறும். 2026ம் ஆண்டு T20 உலகக்கோப்பை நடைபெறுவதால், இந்தமுறை ஆசிய கோப்பை தொடரும் T20 தொடராகவே நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி 28ம் தேதி வரை, போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆசிய கோப்பை தொடரில் இருந்து, 3 வீரர்கள் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரிஷப் பண்ட், பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய மூவரும் தான் அந்த வீரர்கள். கால் காயம் காரணமாக ரிஷப்பும், அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும் என்பதால் பும்ராவும், தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
இதேபோல காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும், ஆசிய கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது.