Thursday, January 15, 2026

அஸ்வின், வருண் பந்துகளில் ‘சிக்ஸர் மழை’ ‘Rocket ரஹேஜா’வுக்கு தீவிர ஸ்கெட்ச்?

IPL தொடருக்கு ஈடாக TNPL தொடரும், ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இதற்கு IPLல் கலக்கிய முன்னணி வீரர்கள் இங்கு ஆடுவதும் முக்கியக் காரணமாகும். இந்தநிலையில் நடப்பு தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக ஆடிவரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துஷார் ரஹேஜா, தன்னுடைய அதிரடி ஆட்டத்தால்  வெகுவாக கவனம் ஈர்த்துள்ளார்.

ஜூன் 8ம் தேதி நடைபெற்ற போட்டியில் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் – சாய் கிஷோரின் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, 93 ரன்களுக்கு மொத்தமாக சுருண்டது. பின்னர் Chasing செய்த திருப்பூர் அணி, 11.5 ஓவரிலேயே இலக்கினை எட்டிப்பிடித்து அசத்தியது.

இதற்கு திருப்பூர் அணியின் 24 வயது இளம் பேட்ஸ்மேன், ரஹேஜாவே முக்கிய காரணம். அஸ்வின் வீசிய 7வது ஓவரில் 3 சிக்ஸர்கள் வெளுத்த துஷார், Mystery Spinner என புகழப்படும் வருண் சக்கரவர்த்தியின் 8வது ஓவரில் 2 ஃபோர், 1 சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இடதுகை பேட்ஸ்மேனான துஷார் TNPL தொடரின், சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்கிறார். இதனால் இவரை செல்லமாக ‘ராக்கெட் ரஹேஜா’ என்று கிரிக்கெட் வட்டாரத்தில் அழைக்கின்றனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், IPL அணிகளின் கவனம் தற்போது துஷார் ரஹேஜா மீது திரும்பியுள்ளது.

எனவே 2026ம் ஆண்டிற்கான IPL மினி ஏலத்தில் ரஹேஜாவை, ஏதாவது ஒரு IPL அணி ஏலத்தில் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Related News

Latest News