அஸ்வின் இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ஆடியிருக்கலாம் என முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அஸ்வினின் திடீர் ஐபிஎல் ஓய்வு குறித்து பேசியிருக்கும் அவர், அஸ்வின் ஏன் ரிட்டையர் ஆனார் என்பது பற்றி தனக்கு தெரியாது எனவும், அதேசமயம் அஸ்வினுக்கு பணம், பெயர், புகழ் ஒரு பெரிய விஷயமல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.
அஸ்வினைப் போல் மற்ற வீரர்களும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்கள் வாய்ப்பு இல்லை எனும் போது பிற லீக்குகள் நோக்கிச் செல்லலாம், ஆனாலும் ஐபிஎல் தொடரில் ஆடுவதால் கிடைக்கும் வெளிச்சமும், அங்கீகாரமும் பிற லீக்குகளில் கிடைக்காது என்றும் கூறியுள்ளார்.
