அரசுப்பள்ளி மாணவியின் அலட்டிக் கொள்ளாத அழகுடன் பாடல், நடனம்! வைரலாகும் வீடியோ

394
Advertisement

தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் மாநில முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் கலை பண்பாட்டு திருவிழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை வயலோகம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி, அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இயல்பாகவே, சிறப்பாக பாடல் பாடும் மற்றும் நடனம் ஆடும் திறமையை பெற்றுள்ள ஆர்த்தி, இவ்விழாவில் கலந்து கொண்டு பாடிய ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, ஆர்த்தி ‘ரஞ்சிதமே’ ‘பிம்பிலிக்கா பிளாப்பி’ போன்ற பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கெல்லாம் காரணம், தன்னுடைய திறமைகளுக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக செயல்பட்ட தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் என கூறும் ஆர்த்தி, அரசின் கலை பண்பாட்டு திருவிழா பலரின் திறமைகளை வெளிக்கொண்டு வர பயனாக அமையும் என கூறியுள்ளார்.

மேலும், இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் ஆர்த்தி, நிச்சயம் கலைத்துறையில் சாதிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.