சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் – நீதிமன்றம் அதிரடி

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதே வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.

சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கர் ஆஜராகாததால் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Related News

Latest News