வங்கதேச அணியின் முன்னணி வீரர் ஷாகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான ஷாகிப் அல் ஹசன் மீது கடந்த டிசம்பர் 15ம் தேதி ‘செக்’ மோசடி வழக்கில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் அவர் ஜனவரி 19ம் தேதிக்குள் ஆஜராக டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஷாகிப் அல் ஹசன் ஆஜராகததால், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.