Monday, April 28, 2025

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் கட்சி பதவி பறிப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புகார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது, ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி விடுவிக்கப்பட்டார்.

Latest news