அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் எம். எல்.ஏ.வுமான காடுவெட்டி குருவின் நான்காம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படவுள்ளது.
இதனால் அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், மீன்சுருட்டி சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ் கான் பரிந்துரைத்தார்.
இதனால், மீன்சுருட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள 22 டாஸ்மாக் கடைகள், நாளை ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக மாவட்ட மேலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.