மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு மார்ச்சில், கார்டன் ரீச் பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியானார்கள். இந்த கட்டிடம் கட்டி 10 ஆண்டுகள் ஆன நிலையில், அது வலதுபுறம் சாய்ந்துள்ளது. இதனால், அதனை வலுப்படுத்துவதற்காக அரியானாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு ஒப்பந்த பணி வழங்கப்பட்டது.
இந்நிலையில், அந்த கட்டிடத்தின் வலுப்படுத்தும் பணியின்போது, அது சரிந்து விழுந்தது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எந்தவித அங்கீகாரமும் இன்றி கட்டுமான ஒப்பந்ததாரர் பணியை மேற்கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து கட்டிடம் கட்டுமான ஒப்பந்ததாரரை போலீசார் தேடி வருகின்றனர். அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.