Thursday, January 15, 2026

‘RCBக்கு’ மீண்டுமொரு பேரிடி ‘சின்னச்சாமி’ மைதானம் அகற்றம்?

‘பட்ட காலிலேயே படுவது போல’ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அடுத்தடுத்து, சோகமான விஷயங்கள் நடந்து வருகின்றன. IPL கோப்பை பாராட்டுவிழாவில், 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம், RCBக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

சரியான திட்டமிடல் இல்லாமல் அவசர, அவசரமாக வெற்றிவிழாவை நடத்தியதே இதற்கு காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் பெங்களூரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும், சின்னச்சாமி மைதானத்தை அகற்றிட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சின்னச்சாமி மைதானம் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள, விதான் சவுதா பகுதியில் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக IPL போட்டிகள் நடைபெறும் போது, அந்த இடம் மிகப்பெரும் போக்குவரத்து சிக்கலை சந்திக்கிறது. இதனால் தான் கூட்டத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதை எல்லாம் மனதில் கொண்டு தான் மைதானத்தை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் முதல்வர் சித்தராமையா இறங்கி இருக்கிறாராம்.

விரைவில் இதுகுறித்து அரசு தரப்பில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது நடந்தால் 18 வருடங்களாக சொந்த மைதானமாக இருக்கும் சின்னச்சாமியை, பெங்களூரு அணி இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News