Friday, March 21, 2025

பாஜகவோடு கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள் – அண்ணாமலை பேட்டி

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.

இன்று பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை எனும் சூழலை இரவு, பகலாக வேலை செய்து தொண்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். எந்த கட்சியோடு கூட்டணி? தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும்? யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பது குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தேசிய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

Latest news