பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை பற்றியும் திமுக அரசை பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் CCTV கேமரா இல்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா? நான் காவல் துறையில் இருந்திருந்தால் எனது நடவடிக்கை வேறு விதமாக இருந்திருக்கும்.
நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்துக்கொள்வேன். நாகரீகமான அரசியல், மரியாதையெல்லாம் இருக்காது. நாளை முதல் என அரசியல் வேற மாதிரி இருக்கும் என அவர் பேசியுள்ளார்.
திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என கூறிய அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகு சொன்னது போல தனது செருப்பை கழட்டினார்.