Friday, April 18, 2025

“திமுகவிற்காக வேலை பார்க்கிறார் அண்ணாமலை” : பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக் குழுக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: எதிர்க்கட்சிகளை எப்படி உடைக்க வேண்டும், எதிர்க்கட்சி தலைவர்களை எப்படி விலைக்கு வாங்குவது, தவெகவுக்கு எதிராக எப்படி பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று திமுக திட்டமிட்டு வருகிறது. அப்படி செட் செய்யப்பட்டவர்தான் அண்ணாமலை என பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெகவில் சாதி இல்லை. ஆனால், திமுகவில் சாதி உள்ளது. அரசியலில் சாதி என்பதை உருவாக்கியதே திமுகதான் என அவர் பேசினார்.

Latest news