Monday, July 7, 2025

கணுக்காலை பாத்து இதயநோயை கண்டுபிடிக்கலாமா?

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வருடத்திற்கு 18 மில்லியன் உயிர்களை காவு வாங்கும் இதய நோய், சில மனிதர்களுக்கு கடைசி நொடி வரை அறிகுறிகளை காட்டாமலே ஆபத்தில் தள்ளுகிறது.

எனினும், நம் உடலில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கவனித்தால், இதயநோய் மட்டுமில்லாமல் வேறுபல நோய்களையும் முன்னதாகவே கண்டுபிடிக்கும் வாய்ப்பு இயல்பாகவே அதிகரிக்கிறது.

வெளிப்புறமாக அடிப்படாமல் திடீரென வீக்கத்துடன் காணப்படும் கணுக்கால்களை அலட்சியம் செய்யக்கூடாது. அதிலும், வீங்கிய பகுதி வெதுவெதுப்பாகவும் அமுக்கினால் அமுங்க கூடிய வகையில் இருந்தாலோ அது peripheral இடிமா என்ற உடலில் நீர் சேரும் உபாதையாக இருக்கலாம்.

பொதுவாக ஒவ்வாமையினால் ஏற்படக்கூடிய விளைவாக கருதப்பட்டாலும், கணமாக உணரப்படும் கை மற்றும் கால்கள் இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கக்கூடும்.

கழுத்து வலி, சோர்வு, மயக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் peripheral இடிமா தீவிரமடையும் போது, இதயத்திலும் நீர் சேரும் அபாயம் உண்டாகிறது.

இந்த நோயை உடனடியாக சரி செய்வதனால் பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என கூறும் மருத்துவர்கள், தீராத இருமல், மூச்சு வாங்குதல், குழப்பமான மனநிலை, உடல் எடை மாற்றம் ஆகியவை இருந்தால் அவை இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் எனவும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என அறிவுறுத்துகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news