‘அங்காடி தெரு’ சிந்துவிற்கு ஏற்பட்ட அடுக்கடுக்கான சோகம்! அழுது புலம்பும் அவலம்

64
Advertisement

வசந்தபாலன் இயக்கிய ‘அங்காடித் தெரு’ படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் சிந்து.

அதற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் வறுமையின் பிடியில் சிக்கிய சிந்து, கொரோனா ஊரடங்கின் போதும் மிகுந்த பொருளாதார சிரமத்துக்கு ஆளானார்.

அதோடு சேர்த்து 2020ஆம் ஆண்டே புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி சிச்சைகளுக்கு பணம் செலவழிக்க திணறினார்.

Advertisement

பணப் பிரச்சினை ஒருபுறம் என்றால் பல்வேறு சிகிச்சைகளும் சரியான பலனளிக்காமல் ஏமாற்றி அவரை அடுத்த கட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது மகள், மற்றும் அவரது கைக்குழந்தையோடு வாழ்ந்து வருவதாக கூறும் சிந்து அவர்களை பார்த்துக் கொள்ளவும் தனக்கு மருத்துவ செலவிற்கும் பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

இது மட்டுமில்லாமல் கையில் வளையல் போட்டதால் அலர்ஜி ஏற்பட்டு ஒரு கை செயலிழந்து போனதாகவும் தெரிவித்துள்ளார்.

தரமற்ற டாட்டூ போட்டதால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் பற்றியும் அண்மையில் Youtube சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தனது பேட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்று மருத்துவ சிகிச்சைக்கும், அவரது மகளுக்கு அரசு வேலையும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.