Saturday, December 6, 2025

பா.ம.க எம்.எல்.ஏ அருள் காரை வழிமறித்து அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல்

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ராமதாஸ் பா.ம.க தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கி, அவருடைய மூத்த மகள் ஸ்ரீகாந்தியை பா.ம.க செயல் தலைவராக அறிவித்தார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வடுகம்பட்டி பகுதியில் ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ. அருள் பயணித்த காரை வழிமறித்து அன்புமணி ஆதரவாளர்கள் தாக்கியதால், இருதரப்பினர் இடையே கடும் மோதல் வெடித்தது. இருதரப்பும் கட்டை, கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பா.ம.க எம்.எல்.ஏ அருள் கூறியதாவது : “என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது. கொலை செய்யும் நோக்கில் என் மீது தாக்குதல் நடத்தினர்; எல்லாரும் அன்புமணி உடன் இருப்பவர்கள்தான். அன்புமணியின் டீசண்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் இதுதானா?” என்று கேள்வி எழுப்பினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News