Thursday, December 25, 2025

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்

மயிலாடுதுறை அருகே பூவாலை கிராமத்தில் சேறும் சகதியுமாக நடக்கவே முடியாமல் உள்ள சாலையில் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலையில் நாற்று நட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வழுவூர் ஊராட்சி பூவாலை கிராமத்தில் 500 ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் ஆற்றங்கரை ஓரமாக உள்ள சுடுகாட்டு சாலைக்கு செல்லும் வழியின் உள்ளே 50 வீடுகள் உள்ளன. இந்த சுடுகாட்டு சாலைக்கு செல்ல கூடிய ஒரு கிலோமீட்டர் சாலை கப்பி கற்கள் பெயர்ந்து சாலை மிக மோசமாக உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் சாலை மிகவும் சேரும் சகதியுமாக நடக்கவே முடியாத சூழலில் உள்ளது. இங்குள்ள பள்ளிக்கு செல்ல கூடிய மாணவர்கள், பொதுமக்கள் சாலையில் வழுக்கி விழுவதாகவும், ஆற்று ஓரம் சாலை இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து தரக்கோரி எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 50க்ககும் மேற்பட்டோர் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலையை சப்பனிட்டுத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News

Latest News